வெள்ளி, 30 நவம்பர், 2012

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு ...

வீட்டில் பெரியவர்கள் இப்படி சொல்ல கேட்டிருப்போம். தமிழன் என்ன இவ்வளவு கருமியா? அல்லது தானம் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்களா?

நமக்கு தெரிந்த வரையில் எந்த பொருளையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. இப்படித்தான் பலரும் இதை புரிந்து வைத்துள்ளோம். 

ஆனால், இந்த பழமொழியில் நம் உடல் நலம் குறித்த இரகசியம் அடங்கி உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நாம் பாடுபட்டு சம்பாதித்த செல்வத்தை  யாராவது ஆற்றில் கொண்டு போய் போட சொல்வார்களா? இந்த கேள்விகளுக்கு விடை தான் இந்த பழமொழியின் உண்மையான பொருள்.

" ஆற்றில் போட்டாலும் அளந்து போடு..."

இதில், "ஆற்றில்" என்பது நாம் அனைவரும் நினைப்பது போல் "நதி" அல்ல. உண்மையாக இந்த பழமொழி எப்படி இருந்தது என்று பார்ப்போம்.

"அகத்தில் போட்டாலும் அளந்து போடு..."

இது, காலப்போக்கில் "ஆத்தில் போட்டாலும் அளந்து போடு" என்றானது. அதை நம் மக்கள் அழகு தமிழில் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு" என்று எழுதினார்கள்.

சரி, பெயர் காரணம் தெரிந்து விட்டது. இந்த பழமொழிக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்மந்தம்??

"அகம்" என்பது நம் உடலை தான் குறிக்கிறது. நம் உடலுக்குள் நாம் போடும் உணவை கூட அளந்து தான் போட வேண்டும் என்பதைத் தான் இந்த பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

இன்று நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு காரணம் நாம் உட்கொள்ளும் உணவு தான். உப்பு, சர்க்கரை, புளி  என்று நம் சமையல் அறையில் இருக்கும் அனைத்து சமாச்சாரங்களும் நம் உடலில் நோயாக தங்கி இருக்கிறது.
நமது உணவு முறையை ஒழுங்கு படுத்தினாலே பல நோய்கள் நம் பக்கமே வராது. 

இப்படிப்பட்ட ஒரு சிறந்த பழமொழியை நாம் முற்றிலும் தவறான வகையில் பயன் படுத்துகிறோம் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வோம்.

"அகத்தில் போட்டாலும் அளந்து போடு...!"

புதன், 28 நவம்பர், 2012

கார்த்திகை தீபம், நாம் அறிந்திடாத பின்னணி...


கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே.

அனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து.

தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற 
நுண்ணுயிர்கள் ் பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது. கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.

நம் குடும்பத்தை பற்றி பெரிதும் அக்கறை படும் நாம், பிற வேலைகளை காரணம் காட்டியும், leave கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லியும் இந்த விழாவை தவிர்க்கலாமா ?


இந்த உண்மை அறியாமல், "பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம்" என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி நம்மை காத்து கொள்வோம்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

முதல் பதிப்பு ...

என் இனிய உலகிற்கு ,

என் முதல் பதிவை உங்கள் முன் வைப்பதில் பெருமையடைகிறேன் . நான் கற்ற, பார்த்த, படித்த, கேட்ட சிலவற்றை இங்கே உங்கள் முன் வைக்கிறேன் . 

இவற்றிற்கு ஓர் நொடியேனும் உங்கள் மனதில் மனதில் இடமளித்தால் அதுவே நாம் நம் முன்னோர்களுக்கு செய்யும் மரியாதை.

பிழை இருப்பின் என் கவனத்திற்கு கொண்டு வரவும்.